கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக சி. தினேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
2017-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான திரு. தினேஷ் குமார் இதுவரை தூத்துக்குடி ஆணையர், சிவகாசியில் துணை ஆட்சியராக பணியாற்றி உள்ளார். பதவி உயர்வு பெற்ற பிறகு, திண்டுக்கல்லில் கூடுதல் ஆட்சியராக (வளர்ச்சி) நியமிக்கப்பட்டார்.
மதுரை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வரும் நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு உள்ளார்.



