சேலம், ஜுன் 23 –
சேலம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட விழிப்புணர்வு தொடக்க விழா நடைபெற்றது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு குறைந்து வரும் பெண் பாலின விகிதத்தை தடுத்தல், பெண் குழந்தைகள் சம உரிமையோடு வாழ்வதையும் அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தல், பெண் குழந்தையின் கல்வியை உறுதி செய்தல், சிறந்த எதிர்காலத்திற்கான தொழில் வழிகாட்டல் பெண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான திறன் மேம்பாடு, சிறுமியர் இடையே விளையாட்டு திறமைகளை அடையாளம் காண்பது போன்ற முக்கிய நோக்கங்களுடன் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தில் 2026 – 2027 நிதி ஆண்டில் விழிப்புணர்வு வார விழா இன்று 23.6.2026 தொடங்கி 27.06.2026 வரை நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் தூதுவர்களாக முதல் கட்டமாக நியமிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவியர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் இந்த மாணவியர்கள் தங்களது பள்ளி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் வகையில் இந்த திட்டத்தின் தூதுவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ள பகுதிகளை தேர்ந்தெடுத்து பிறப்பு விகிதத்தை உயர்த்தும் நோக்கத்தோடு அங்கன்வாடி மைய அலுவலர்கள் தாய்மார்களுக்கு உரிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதே போன்று கல்வி துறையில் பெண் குழந்தைகளின் இடை நிறுத்தத்தை தவிர்த்து பெண் குழந்தைகளின் உயர் கல்வி தரத்தினை அதிகரிக்கும் நோக்கத்தோடு விளையாட்டு துறையில் தன்னம்பிக்கைகளை அதிகரிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளின் கல்வி சமூக நலன் பொருளாதார மேம்பாடு தொடர்ச்சியான வளர்ச்சியை கருத்தில் கொண்டு தொடர் நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகளவில் பெண்களே பணியாற்றி வருகின்றனர். பெண் குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்பினை பெற்றோர்கள் வழங்க வேண்டும். சமூகத்தில் இருக்கும் பழமையான கருத்துக்களை புறந்தள்ளி பெண் குழந்தைகளை போற்றி பாதுகாக்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு வீதம் குறைவாக உள்ள பகுதிகளில் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. பெண் குழந்தைகளின் பிறப்பை முழுமையாக ஏற்று சமூகத்தில் அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் முன்னதாக பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்.
பெண் குழந்தைகளின் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டது. கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் மருத்துவ முகாமை பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் வரையப்பட்டுள்ள இலட்சினையை மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் பார்வையிட்டார்.



