பர்கூர், ஜூன் 19 –
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்
ச. தினேஷ்குமார் உத்தரவின் பெயரில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைகுறல் தலைமையில் வட்டாட்சியர் சி.சக்தி முன்னிலையில் 1435 ஆம் ஆண்டு பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு விழாவில் சூலாமலை குருவிநாயனப்பள்ளி ஓரப்பம் செந்தாரப்பள்ளி மோடிக்குப்பம் வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, ஜாதி சான்றிதழ், பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா, மற்றும் வீட்டு மனை பட்டா, பட்டா ரத்து, ஆக்கிரமிப்பு அகற்றல், நில அபகரிப்பு, புதிய குடும்ப அட்டை, கிராம கணக்கில் மாற்றம், 523 மனுக்கள் பெறப்பட்டது.
இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட 73 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உடனடி ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனை குறல் வழங்கினார். இதர துறைகள் சார்ந்த மனுக்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் மோகன்தாஸ், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மனுக்களாக வழங்கினர்.



