மதுரை ஜூன் 20,
மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு சார்ந்து பேச்சுப்போட்டி மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரையின் படி உதவி மாவட்ட திட்ட அலுவலர்கள் முன்னிலையில் மாவட்ட திட்ட அலுவலக பயிற்சி அரங்கில் நடைபெற்றது. இப்பேச்சு போட்டியில் ஒவ்வொரு வட்டார அளவில் முதல் பரிசு பெற்ற மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ மாணவியருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளும் வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



