நாகர்கோவில், மே 2 –
நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில், மேலத்தெரு கரை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (47). கூலி தொழிலாளியான இவரது வீட்டின் பின்புறம் வைத்து அதே பகுதியை சேர்ந்த சிலர் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தனர். இதை சீனிவாசன் கண்டித்துள்ளார். இது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று சீனிவாசன் தனது வீட்டருகே நின்று கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (37) என்பவர் வந்து, முன் விரோதத்தை மனதில் வைத்து தகராறு செய்து, கத்தியால் இடது பக்க கழுத்தில் வெட்டினார். இதில் சீனிவாசன் பலத்த காயம் அடைந்தார்.
அவரை உடனடியாக சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்.


