By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெளிநாட்டிற்கு அனுப்புவதாக மோசடி; பொதுமக்கள் எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்கலாம் – எஸ்.பி. பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெளிநாட்டிற்கு அனுப்புவதாக மோசடி; பொதுமக்கள் எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்கலாம் – எஸ்.பி. பேட்டி
கனஂனியாகுமரி

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக மோசடி; பொதுமக்கள் எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்கலாம் – எஸ்.பி. பேட்டி

Last updated: July 4, 2025 3:08 pm
July 4, 2025
41 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 4 –

குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குற்றமில்லா, விபத்தில்லா மாவட்டமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தல் தொடர்பாக தினமும் 6 முதல் 7 புகார்கள் வருகின்றன. எனவே அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சி பற்றிய விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 வாரங்களில் அந்த பணிகள் முடிந்து விடும். அதன் பிறகு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பின்னர் அங்கீகாரம் இல்லாத ஏஜென்சி வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறினால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கலாம்.

கன்னியாகுமரிக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர். ஆகவே, அங்கு புற காவல் நிலையம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அனைத்து மொழிகளும் பேசும் வகையில் செயற்கை நுண்ணறிவு ரோபோ ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாத்தலங்களில் காதல் ஜோடி அத்துமீறலை தடுக்கும் வகையில் சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் மூலம் வாரத்திற்கு 3 கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறோம். அவர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டம் முழுவதும் போலீஸ் சார்பில் 1200 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள சில கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் உள்ளது. அந்த கேமராக்களை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாகர்கோவில் மாநகரில் காலை, மாலை நேரத்தில் போக்குவரத்தை சரி செய்ய குறைவான போலீசாரே இருந்தனர்.

ஆனால், தற்போது 40 போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஒரு சில இடங்களில் தேவை இல்லாமல் தடுப்புகள் உள்ளதாக புகார் வந்துள்ளது. தேவையில்லாத இடங்களில் உள்ள தடுப்புகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்படுவர்.

குமரியில் கனரக வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதாக புகார்கள் வந்துள்ளது. இது மட்டுமின்றி தேங்காய் பட்டணத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. எனவே பள்ளிகள், கல்லூரிகள் நேரங்களில் கனரக வாகனங்கள் அந்தப் பகுதியில் செல்லாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டம் முழுவதும் கனரக வாகனங்கள் இயக்குவதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்படும்.

பொதுமக்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். தற்போது தினமும் 150 பேர் வரை செல்போன் மூலம் புகார்களை தெரிவித்து வருகின்றனர். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவிப்பவர் விவரம் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

அம்ரூத் 2.0 திட்டத்தால் அல்லல்படும் அஞ்சுகிராமம் பேரூராட்சி; சாலைகளை பொதுமக்களே சரி செய்யும் அவலம்
வீட்டு செல்லப் பிராணிகளுக்கு சிகை அலங்கார போட்டி: இந்திய அளவில் முதல் பரிசு பெற்ற குமரி மாவட்ட வாலிபர்
ஏழைகளுக்கு நோன்பு பரிசு: துணை மேயர் தொடங்கி வைத்தார்
இன்ஜினியரிங் மாணவரை வழிமறித்து வெட்டு
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு: தொழிலாளர்துறை சார்பில் வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்: கொடியசைத்துத் துவக்கி வைத்த ஆட்சியர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை விமான நிலையத்தில் தவெக எம்.எல்.ஏ சுகுமார் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் செய்தியாளர் சந்திப்பு

May 15, 2026
17 Views
அய்யா வைகுண்டர் அவதார தினவிழா: திருவனந்தபுரம் சிங்காரதோப்பு பதியிலிருந்து பல்லக்கு பவனி
பட்டணம்காத்தான ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
விநாயகா இன்ஸ்டியூட் மற்றும் மதுரை ஸ்டார் நண்பர்கள் அறக்கட்டளை குழு சார்பாக நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கும் விழா
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account