நாகர்கோவில், செப்டம்பர் 13:
கன்னியாகுமரி மாவட்ட கைப்பந்து கழகமும் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவ அறக்கட்டளை இணைந்து பள்ளி, கல்லூரி மற்றும் கிளப்புகளுக்கான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை (13ம் தேதி) காலை 9 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்குகிறது. போட்டிகளை கைப்பந்து கழக நிர்வாகிகள் தொடங்கி வைக்கின்றனர்.
13ம் தேதி (நாளை) பள்ளி அணிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும், தொடர்ந்து 16ம் தேதி கல்லூரி அணிகளுக்கான போட்டிகளும், 17ம் தேதி கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டிகளும் நடக்கிறது. அன்று இரவு நடக்கும் இறுதி போட்டியை எஸ்.பி. ஸ்டாலின் தொடங்கி வைத்து பரிசு வழங்குகிறார். இந்த போட்டிகளில் 55 பள்ளி அணிகளும், 35 கல்லூரி அணிகளும், 40 கிளப் அணிகளும் கலந்துகொண்டு விளையாட உள்ளது. போட்டி ஏற்பாடுகளை மாவட்ட கைப்பந்து கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


