By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நவராத்திரி விழா முன்னிட்டு பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நவராத்திரி விழா முன்னிட்டு பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி
கனஂனியாகுமரி

நவராத்திரி விழா முன்னிட்டு பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி

Last updated: September 20, 2025 7:21 pm
September 20, 2025
63 Views
Share
SHARE

தக்கலை, செப். 20 –

பத்மநாபபுரம் அரண்மனையில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் நிர்வாக காரணத்திற்காக 1840 ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சி திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி விக்ரங்கள் யானை, வெள்ளி குதிரை வாகனம் மற்றும் பல்லக்கில் ஊர்வலமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. பின்னர் அங்கு 10 நாட்கள் நவராத்திரி விழா பூஜைகளில் பங்கேற்ற பின்பு சாமி சிலைகள் மீண்டும் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருவது மரபு.

இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 23ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு தக்கலை பத்மநாபபுரம் வந்தடைந்தது. அது போன்று குமாரகோவில் முருகன், தேவாரக் கட்டு சரஸ்வதி அம்மன் விக்கிரகங்கள் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்தடைந்தது.

தொடர்ந்து 2வது நாள் நிகழ்ச்சியாக இன்று பத்மநாபபுரம் அரண்மனையில் பாரம்பரிய முறைப்படி மன்னர் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதழ் தமிழக கேரள மாநில போலீசார் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மன்னரின் உடைவாளை கேரள தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் தமிழக இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் ஜான்சிராணி இடம் ஒப்படைத்தார். அவர் அதனை பெற்று அரண்மனை ஊழியர் மோகனகுமாரிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பல்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், விஜய் வசந்த் எம்பி, கேரளா எம்எல்ஏக்கள் ஹரேந்திரன் (பாறசாலை), வின்சென்ட் (கோவளம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழக போலீசாரின் அணிவகுப்பு மரியாதை உடன் சுவாமி விக்கிரகங்கள் பலத்த பாதுகாப்புடன் பக்தர்கள் புடை சூழ ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த ஊர்வலம் இன்று இரவு குழித்துறை சென்று அங்கு தங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை அங்கு இருந்து புறப்பட்டு நெய்யாற்றின்கரை கிருஷ்ணன் கோவிலை சென்றடைகிறது. 22 ஆம் தேதி காலையில் நெய்யாற்றின் கரையில் இருந்து சாமி சிலைகள் புறப்பட்டு அன்று இரவே திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலை சென்றடையும். அங்கு சிறப்பு வழிபாடுகளுக்கள் நடக்கிறது.

விளம்பரம்

You Might Also Like

பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா தொடக்கம்
ராமேஸ்வரம் போலீசாரால் தேடப்பட்டு வந்த திருடன்
காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிப் படுகொலை
கீழ்குளத்தில் ரூ.72 லட்சத்தில் சாலை சீரமைப்பு
காமராஜர் பெயரில் நுழைவு வாயில் அமைக்க காங்கிரசர் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

20 நரிக்குறவர் குத்துச்சண்டை மாணவர்களுக்கு உபகரணங்கள்

October 17, 2024
96 Views
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஸ்ரீ அருள்மிகு காளியம்மன் மாரியம்மன் கோவில் கொடை விழா
கனிமவள லாரி ஓட்டுனர்கள் மனித உயிர்களை தூசி போல் எண்ணுகின்றனர்; போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை என்ன – பா.ஜ. கவுன்சிலர் சுபாஷ் கேள்வி
FOB குழந்தைகளை தாக்கும் நோய்க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account