வேலூர், ஜூலை 06 –
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலூர் மண்டலம் தலைமையகத்தில் டயர் புதுப்பித்தல் பிரிவில் தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றி 30.06.2026 ஓய்வு பெற்ற தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் லயன் சே.மணி அவர்கள் பணி நிறைவு பாராட்டு விழா வேலூரில் மாவட்ட கவுன்சில் செயலாளர் தா.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொமுச மாநில தலைவர் நடராஜன் பொருளாளர் கோ.சி.வள்ளுவன், நிர்வாக பிரிவு செயலாளர் விஜயகுமார், மேற்பார்வையாளர் பிரிவு செயலாளர் பசுபதி, மாநில, மண்டல நிர்வாகிகள், உடன் பணிபுரிந்த தொழிலாளர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



