தென்காசி, மே 18 –
தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலை கதிரவன் தன்னை வெற்றி பெற செய்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
நன்றி தெரிவிக்க தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலகரம் பகுதிக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலை கதிரவனுக்கு மேலகரம் பேரூர் துணைத் தலைவர் ஜீவானந்தம் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிகழ்வில் மாநில திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, முன்னாள் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன், ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் காசி தர்மம் துரை மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.



