நாகர்கோவில்,ஏப். 17 –
கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் தளவாய்சுந்தரத்தை ஆதரித்து நடிகர் தாடி பாலாஜி இன்று வட்டக்கோட்டை மற்றும் லீபுரம் பகுதிகளில் திறந்த வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர்: உங்கள் வேட்பாளர் தளவாய்சுந்தரத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் அவரை மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். அதை பார்க்கும் போது அவர் வெற்றி பெறுவர் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. ஒருவர் பாராளுமன்றம் முதல் சட்டமன்றம் வரை செல்ல வேண்டும் என்றால் புரட்சி தலைவி அம்மாவின் மனதில் இடம் பிடிக்க வேண்டும்; அப்படி இடம்பிடித்தவர் தான் தளவாய் சுந்தரம்.
இந்த இடங்களில் உள்ள ஆறுகள், குளங்களை பார்க்கும் போது தூய்மையான நகரமாக உள்ளது. அதற்கு தளவாய்சுந்தரத்தின் பணி தான் காரணம். மீண்டும் உங்கள் பகுதியில் பல நலத்திட்டங்கள் செய்திட அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என அவர் கூறினார்.
இதில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார், கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம் உட்பட அதிமுக மற்றும் கலப்பை மக்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.



