கமுதி, ஜுன் 1 –
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் 10-ம் வகுப்பு மாணவி காசிகா சக்தி 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதனை பாராட்டும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜித் காலோன் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி ஆகியோர் பள்ளியின் தலைமையாசிரியை சிந்துமதியை பாராட்டி விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
இதனை தொடர்ந்து க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நிர்வாக குழு சார்பில், செயலர் சங்கர் தலைமையில், தலைவர் சண்முகராஜ் பாண்டியன், பொருளாளர் சரவணன்,
உறுப்பினர்கள் குழந்தை ராஜன், ஜெகன் ஆகியோர் தலைமையாசிரியை சிந்துமதியை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.



