திருச்சி, ஜூன் 17 –
திருச்சி துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த தட்சிணாமூர்த்தி, மருத்துவ விடுப்பில் இருந்தபோது, தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பும் வழியில், எதிரே வந்த வாகனம் மோதி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து துவாக்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



