தருமபுரி, ஜூலை 10 –
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான தமிழ்நாடு ஓட்டலில் தமிழகத்தில் முதல் முதலாக ரூ. 99 க்கு சிக்கன் பிரியாணி அறிமுகம் விஐபிகள் மட்டும் அதிக விலை கொடுத்து சாப்பிடுவார்கள் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் ஏழை எளிய மக்கள் சாப்பிட வேண்டும் என்று சுற்றுலாத்துறை சார்பில் முதல் முதலில் ஒகேனக்கலில் அறிமுகம்
ஆர்வமாக வாங்கிச் சென்ற சுற்றுலா பயணிகள். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் தமிழ்நாடு ஓட்டலில் ரூ. 99 சிக்கன் பிரியாணி விற்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர்.
தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் 33 தமிழ்நாடு ஹோட்டல்கள் செயல்பட்டு வருகிறது. அதேபோல் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு ஓட்டல் செயல்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் தங்கும் வகையிலும் சுகாதாரமான உணவினை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கும் வகையில் தமிழ்நாடு ஓட்டல் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கலில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவதால் அவர்களை ஈர்க்கும் வகையில் ரூ.99 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி விற்கப்பட்டது. பொதுவாக சுற்றுலா தளத்தில் உணவின் விலை அதிக அளவில் இருக்கும். ஆனால் தமிழ்நாடு ஓட்டல் நிர்வாகத்தின் மூலம் மிக குறைந்த விலையில் சிக்கன் பிரியாணி விற்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக அதிக அளவில் விற்பனையில் நடைபெற்றது.



