தருமபுரி, மே 02 –
தருமபுரி மாவட்ட FITU (பெடரேஷன் ஆப் இன்டியன் டேர்ட் யூனியன்) சார்பில் 140ம் ஆண்டு உலகத் தொழிலாளர் தினமான மே தினத்தினை கொண்டாடும் வகையில் தருமபுரியில் மே தின ஊர்வலம் நான்கு ரோடு ஆவின் பாலகம் அருகில் துவங்கி சேலம் பைபாஸ் சாலை, நாச்சியப்பன் தெரு வழியாக ராஜகோபால் பூங்கா வரை ஊர்வலமாக சென்று நிறைவுற்றது. இந்த மே தின ஊர்வலத்திற்கு FITU மாவட்ட பொறுப்பாளர் ஜி. மாதையன் தலைமை வகித்தார். ஊர்வலத்தினை இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் ஜி. பச்சாகவுண்டர் துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தின் இறுதியில் நடைபெற்ற மேதின கூட்டத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் மேதின சிறப்புரையாற்றி அவர் பேசியவதாவது:
ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற் புரட்சித் காரனமாக முதலாளித்துவம் தோன்றியது. இதனுடன் சேர்ந்து தொழிலாளி வர்க்கமும் தோன்றியது இதன் முரண்பாடாக சுரண்டலை எதிர்த்து தொழிலாளர் வர்க்கம் 8 மணி நேரம் வேலை, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் வேண்டி 1886 – ம் ஆண்டு அமெரிக்க நாட்டின் சிக்காகோ நகரில் வெடித்த போராட்டத்தின் விளைவாக மே 1 அன்று நடந்ததால் 1889ம் ஆண்டு மே தினம் உருவானது.
இதன் 140 – வது ஆண்டு தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்ட FITU கொண்டபடுவதற்கு வர்க்கத்தினரும் மேதின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைய அமெரிக்க ஏகாதிபத்தியம் டாலர் வீழ்சியனால் போர் உருவாக்கி எண்ணெய் வளங்களை கைப்பற்ற முற்பட்டு வருகிறது. வெணிசுலா அதிபரை கைது செய்துள்ளது ஈரான் மீது போர் தொடுத்துள்ளது போன்ற நடவடிக்கைகளை தொழிலாளர் வர்க்கம் வீருகொண்டு எதிர்த்து போராடி வருகிறது.
ஒன்றிய பாஜக அரசு பிரிடீஸ் ஆட்சியில் விடுதலைக்குப் பின்பும் போராடிய 44 தொழிற் தகராறு சட்டங்களை நிறைவேற்றி நடைமுறையில் இருந்ததை மாற்றி நான்கு சட்ட தொகுப்புகளாக கொண்டு வந்துள்ளது. தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான செயலர் இதனை ரத்து செய்ய தொழிலாளர் வர்க்க தினமலர் மே தினத்தில் உறுதி ஏற்போம் என்று பேசினார்.
கூட்டத்தில் தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மாவட்ட செயலாளர் கே. ரவிச்சந்திரன், தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ஈ. அலமேலு, இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் பி. ரவி, கட்டுமான தொழிலாளர் சங்க சி. பாலன், இந்திய பழங்குடி மக்கள் சங்க பொறுப்பாளர் ஜி. ராஜகோபால், அமைப்பு சாரா தொழிலாளர் சங்க எம். குமார், பள்ளிக்கல்வித்துறை தூய்மை பணியாளர் சங்க மாதையன் ஊரக வேலை உறுதி அளிப்பு சங்க எல். சி. கிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள். இறுதியில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஜி. சம்பத் நன்றி கூறினார்.



