By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ், தமிழ் என கூறி மத்திய அரசு செய்யும் ஏமாற்று வேலையை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்: தஞ்சாவூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தமிழ், தமிழ் என கூறி மத்திய அரசு செய்யும் ஏமாற்று வேலையை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்: தஞ்சாவூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

தமிழ், தமிழ் என கூறி மத்திய அரசு செய்யும் ஏமாற்று வேலையை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்: தஞ்சாவூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Last updated: March 6, 2026 6:13 pm
March 6, 2026
36 Views
Share
SHARE

தஞ்சாவூா், மார்ச் 6 –

தஞ்சாவூா் கரந்தை தமிழ் சங்கத்தில் நிரந்தர உறுப்பினர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவ சிலை மற்றும் தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவர் செயலாளர் ராமநாதன் உருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் துரை சந்திர சேகரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். கரந்தை கலைக் கல்லூரி முதல்வர் ராசாமணி அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதி, ராமநாதன் ஆகியோரின் உருவ சிலைகளை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: வரலாற்றுச் சிறப்புமிக்க கரந்தை தமிழ் சங்கத்தினுடைய வளாகத் திலே கருணாநிதி சிலையையும், சங்கத்துடைய முன்னாள் தலைவர் செம்மொழி வேளிர் ராமநாதனு டைய சிலையையும் உங்களுடைய முன்னிலையிலே திறந்து வைத்த .தில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

நிகழ்ச்சியினுடைய தொடக்கத் திலே தமிழ்த்தாய் வாழ்த்தை நாம் பாடி இருக்கின்றோம். தமிழ்த்தாய் வாழ்த்து முதன்முதலாகப் பாடப் பட்டது .இந்தக் கரந்தை தமிழ்ச் சங்கத்தில்தான். அதன் பிறகு 1970-களில் கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்தைத் தமிழ்நாடு அரசினு டைய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்தார்.

இது வெறும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தான். இதற்கு எழுந்து நின்று நம்முடைய மரியாதை செலுத்தத் தேவையி ல்லை என்று ஒரு கூட்டம் சொல்கிறது. இன்னும் சில பேர் சட்டப்பேரவையிலே இந்த பாட்டையே பாடக்கூடாது, அப்படின்னு ஒரு கூட்டம் சொல்கிறது. ஆனா இந்த பாடல் தமிழ்நாடு அரசினுடைய மாநிலப் பாடல் என்பதை அறிவித்து அதைப் பாடும் பொழுது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று அரசாணையைப் போட்டவர் கருணாநிதி தான்.

கரந்தை தமிழ்ச் சங்கத்தின் மீது கருணாநிநிக்கு எப்பொழுதுமே மிகப்பெரிய பற்றும் ஈடுபாடும் உண்டு. குறிப் பாகச் சொல்ல வேண்டும் என்றால் , 1962-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி தஞ்சையில் போட்டியிட்டபோது கரந்தை பகுதி யிலிருந்து தான் தன்னுடைய தேர்தல் பணிகளை அவர் செய்தார். கருணாநிதி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற கரந்தை தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகள் அத்தனை பேரும் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

அப்படிப்பட்ட கரந்தை தமிழ்ச் சங்க த்தில் கருணாநிதி, ராமனாதன் ஆகியோரின் சிலையையும் திறந்து வைக்கின்ற வாய்ப்பைக் கொடுத்த தமிழ்ச் சங்கத்திற்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். 1911-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சங்கம் இன்றைக்கு100 ஆண்டுகளைக் கடந்து தமிழ்ச் சேவை, கல்விச் சேவைன்னு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது.

தமிழுக்கு வருகிற ஆபத்துகளை எதிர்க்கிறது ஒரு பக்கம். தமிழினுடைய பெருமையைப் பரப்புரது இன்னொரு பக்கம்னு இந்தச் சங்கத்துடைய பணிகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என 1920-லேயே தீர்மானம் போட்டது கரந்தை தமிழ்ச் சங்கம்தான். இந்தச் சங்கத்துடைய தலைவராகப் பணியாற்றிய செம்மொழி வேளிர் ராமனாதனின் பங்கு மிகுந்த சிறப்பு வாய்ந்தது. முக்கியம் வாய்ந்தது. தமிழுக்குத் தனிப் பல்கலைக் கழகம் தேவை என்று கரந்தை தமிழ்ச் சங்கம் தான் முதன் முதலாகத் தீர்மானம் போட்ட சங்கம்.

எல்லாத்தையும் விட ஒரு கூடுதல் மிகப்பெரிய ஒரு சிறப்பு 1937-ல் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியைத் திணிக்கும் போது அதை எதிர்த்துத் தீர்மானம் போட்டதும் இந்தக் கரந்தை தமிழ்ச் சங்கம்தான். இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்துல நூற்றுக்கணக்கான மகளிரைப் பங்கேற்க வைத்த அன்னை தர்மாம்பாள் இந்தக் கரந்தையை, சேர்ந்தவங்கதான். அப்போது தொடங்குன இந்தித் திணிப்பு முயற்சி இப்ப வரைக்கும் தொடர்ந்துகிட்டு இருக்கிறது.

நேற்று கூட நீங்க தொலைக் காட்சியில பார்த்திருப்பீங்க. திருச்சியில இருக்கக்கூடிய தெற்கு ரெயில்வே அலுவலக வாயிலில் இந்தி மொழி யில் எழுதி வைத்ததை எதிர்த்து நம்முடைய முதலமைச்சர் தான் முதல் எதிர்ப்புக் குரல் பதிவு செய்தார்கள். அதுமட்டுமின்றி, இன்றைக்கு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் எப்படியாவது மீண்டும் தமிழ்நாட்டிற்குள்ளே இந்தியை திணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டினுடைய கல்வி நிதி ரூ. 3,500 கோடியை கொடுக்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் அந்த 3,500 கோடியை கொடுப்போம் என்று மத்திய அரசு கூறுகிறது.

ஆனா நம்முடைய முதலமைச்சர் 3,500 கோடி இல்லை. 10,000 கோடி கொடுத்தாலும் இந்தியையும் சமஸ்கிருதத்திற்கும் தமிழ்நாட்டில் எந்த நேரத்திற்கும் இடம் கிடையாது என்று உறுதியாக கூறிவிட்டார். கருணாநிதி வழியில் நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைச் செய்து வருகிறது.

தமிழினுடைய தொன்மையை வெளி உலகிற்குச் சொல்கிற வகையிலே வேர்ச் சொல் ஒப்பீட்டு ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தமிழறிஞர்களுக்கு விருதுகளும், தேசிய சர்வதேச விருதுகளைப் பெற்ற எழுத்தாளர் களுக்கு வீடுகளும் நம்முடைய முதலமைச்சர் தொடர்ந்து வழங்கி வருகிறார். தமிழினுடைய அரிய நூல்கள் எல்லாமே இன்றைக்கு டிஜிட்டல் வடிவில் மாற்றப்படுகிறது. தமிழில் இருக்கக்கூடிய சிறந்த நூல்கள் உலகத்தில் இருக்கக் கூடிய பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அதேபோல் உலகின் சிறந்த நூல் களை எல்லாம் தமிழில் கொண்டு வர முயற்சிகளை நம்முடைய அரசு எடுத்து வருகின்றது.

ஆனால் மத்திய அரசு சமஸ்கிருதத்தை வளர்க்கிறதில் மட்டும்தான் அக்கறையைக் காட்டி வருகின்றது. கடந்த 10 ஆண்டுக ளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காக மட்டும் மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ.2,500 கோடி. ஆனால் நம்முடைய தமிழ் மொழி வளர்ச்சிக் காக மத்திய அரசு ஒதுக்கிய தொகை வெறும் 147 கோடி ரூபாய்.

தமிழ் தமிழ்ன்னு சொல்லி இன்றை க்கு மக்களை ஏமாற்றும் வேலை யை மத்திய அரசு செய்து வருகி ன்றது. அந்த ஏமாற்று வேலைகளை எல்லாம் நாம் அனைவரும் ஒன்றி ணைந்து முறியடிக்க வேண்டும். உண்மையாகத் தமிழுக்காக உழைப்பவர்கள் யார்? போலித்தன மாக நடிப்பவர்கள் யார்? என்பதை மக்களுக்கு நாம் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். எனவே இந்த முக்கியமான நேரத்தில் நீங்கள் அத்தனை பேரும் நம்முடைய முதலமைச்சருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அன்னைத் தமிழைப் காப்போம், ஆதிக்க மொழித் திணிப்பை என்றும் வீழ்த்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர்எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், முரசொலி எம்.பி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், டி.கே.ஜி. நீலமேகம் எம்எல்ஏ, தாட்கோ தலைவர் இளையராஜா, மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கவுன்சிலர் செந்தமிழ்செல்வன், தமிழ் சங்கத் தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் தமிழ் சங்க செயலாளர் சுந்தரவதனம் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சென்னையில் கிராண்டீஸ் இன்ஸ்டியூட் கைபேசி, மடிகணிணி தொழில்நுட்ப பயிலகம் புதிய கிளை திறப்பு விழா
களியக்காவிளை, தக்கலை பகுதிகளில் குட்கா விற்ற 2 பேர் கைது: 24 கிலோ பறிமுதல்
முசிறி: மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
ரூ.100 கோடி முதலீட்டு இலக்கு: ஸ்டார்ட் அப் சிங்கம் சீசன்-2வில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்பு
சலூன் கடைக்காரர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

September 13, 2024
67 Views
வன்கொடுமை வழக்குகளில் கூடுதல் கவனம்
அரசு திட்டங்களை விளம்பரப்படுத்திய தனியார் மருத்துவமனை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
களியக்காவிளை அருகே தென்னைமர மூட்டு பகுதியில் முளைக்கும் தென்னை கன்று; அதிசயமாக பார்க்கும் பொதுமக்கள்
தூத்துக்குடியில் அமைச்சர் பி..கீதா ஜீவன் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account