திருப்பூர், ஜூன் 22 –
தமிழக வெற்றி கழக தலைவர் தமிழ் நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை அன்னதான உணவு வழங்கப்பட்டது. விழாவிற்கு பொருளாளர் வெள்ளைச்சாமி தலைமையில் ராஜசேகர், பால குமார் முன்னிலையில் கனிஷ்கா சிவக்குமார், ஓம் சக்தி சில்க்ஸ் ரஞ்சித் குமார் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.
இதில் சொர்க்கம் நீதி ராஜன், புதிய பேருந்து நிலையம் பகுதி கழகம் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் பாலா, ராஜசேகர் திலீப், ரங்கசாமி, செல்வராஜ், மணிகண்டன், அருண் பாண்டி, சிதம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



