தஞ்சாவூர், ஜூலை 23 –
தஞ்சாவூரில் ரூபாய் 3 கோடியில் முதலமைச்சர் படிப்பகம் கட்டுமான பணி நடைபெறுவதை கலெக்டர் ரேவதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் உள்ள முனிசிபல் காலனி பகுதி யில் கல்வி நிதித்திட்டம் 2025 26ன் கீழ்௹பாய் 3.05 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் முதலமைச் சர் படிப்பகம் கட்டுமானப் பணிக ளை கலெக்டர் ரேவதி பார்வையிட் டு ஆய்வு செய்தார். இந்த கட்டிடத் தின் தரைத் தளத்தில் மென் பொரு ள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் செயல்படுவ தற்காக 38 பேர் பணியாற்றும் வசதியுடன் இருக்கைகள், மேஜை கள் மற்றும் ஆலோசனை கூடங்கள், தேவையான உள்கட்டமைப்பு வசதி கள் அமைக்கப்பட உள்ளன.
முதல் தளத்தில் டி.என்.பி. எஸ். சி, யு.பி.எஸ்.சி., ஆர் ஆர்.பி, நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக போட்டி தேர்வுக்கான நூல்கள் கிடைக்கும் வகையில் கல்வி மையம் அமைக்கப்பட உள்ளது. மேலும் மூன்றாவது தளத்தில் உணவு அருந்தும் கூடம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் உயர்தரத்துடன் முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும் மேலும் இம்மையத்திற்கு பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் வருகை தரவுள்ளதை முன்னிட்டு அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, மின்வசதி இணைய வசதி, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்தி தருமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உரிமைகள் திட்ட உலக வங்கி நிதி உதவியுடன் கல்லுக்குளம் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் செயல்படும் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொதுப்பணி துறை சார்பில் பழைய கோர்ட்டு வளாகத்தில் மாதிரி பள்ளி செயல்படும் வகையில் ரூபாய் 50 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்பு பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் தஞ்சாவூர் மண்டல நுகர் பொருள் வாணிபக் கழக முதுநி லை மேலாளர் அலுவலக கூட்டரங் கில் நடைபெற்ற நெல் கொள்முதல் மற்றும் இயக்க பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திலும் கலெக்டர் கலந்து கொண்டார்.
இதில் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், தஞ்சாவூர் மாநகராட்சி (பொறுப்பு) மணிகண்டன் முதன்மை கல்வி அலுவலர் பேபி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் உலக நாதன், பொதுப்பணிதுறை செயற்பொறியாளர் நாகவேலு, உதவி செயற்பொறியாளர் ரகு, தஞ்சாவூர் தாசில்தார் மூர்த்தி, உதவி பொறியாளர் ஹரிஹரசுதன், மாநகராட்சி பொறியாளர் மோகன், உதவி நிர்வாக பொறியாளர் பிரதான் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



