ஈரோடு, ஜூலை 17 –
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஜெயராமபுரத்தில் அமைந்துள்ள மாவீரன் பொல்லான் அரங்கத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் 221வது நினைவஞ்சலி நிகழ்ச்சி மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவீரன் பொல்லான் பேரவை சமூக நீதி கட்சியின் தலைவர் வடிவேல் ராமன், பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு, மாவீரன் பொல்லானின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, மாவீரன் பொல்லானின் தியாகப் பணிகளையும், நாட்டின் விடுதலைக்காக அவர் ஆற்றிய வீரச் செயல்களையும் நினைவுகூர்ந்து பேசினர். அவரது தியாக உணர்வும், தேசப்பற்றும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றன என்றும், அவரது வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த நினைவஞ்சலி நிகழ்வில் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.



