By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பயிர் பாதிப்பை செயலியில் பதிவு செய்ய விவசாயிகள் எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பயிர் பாதிப்பை செயலியில் பதிவு செய்ய விவசாயிகள் எதிர்ப்பு
தஞ்சாவூர்தமிழ்நாடு

பயிர் பாதிப்பை செயலியில் பதிவு செய்ய விவசாயிகள் எதிர்ப்பு

Last updated: December 6, 2025 7:59 pm
December 6, 2025
56 Views
Share
SHARE

தஞ்சாவூர், டிசம்பர் 6 –

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 35,000 நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், பயிர் பாதிப்பை செயலியில் பதிவு செய்ய விவசாயிகள் எதிர்ப்பு. விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துக்கு துணை போகும் காவிரி ஆணையம் மத்திய அரசை கண்டித்தும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு துணை போகக் கூடாது என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பியவாறு விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். சுமார் 15 நிமிடங்கள் கழித்து விவசாயிகள் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதற்கிடையே கலெக்டர் உள்ளிட்ட அலுவலர்கள் அமர்ந்த மேடை முன் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் ஒருவர் தலைகீழாக நிற்க முயற்சி செய்தார். இவரை காவல்துறை தடுத்து நிறுத்தியதால் அந்தமுயற்சி கைவிடப்பட்டது.

இதுகுறித்து கக்கரை சுகுமாரன் பேசுகையில்: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வேளாண் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் நேரில் சென்று செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட பரப்பளவு அதிகமாக உள்ள நிலையில் அனைத்தையும் எப்படி பதிவு செய்ய முடியும் மேலும் கணக்கெடுப்பை குறைத்து எடுக்கு மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது.

கலெக்டர் : பயிர் பாதிப்பு விவரங்களை செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மாநில அரசு செய்கிறது. அவ்வாறு செய்தால்தான் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும். குறைத்து கணக்கெடுப்பு செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் எதுவும் கூறவில்லை. தவறான தகவல்களை கூற வேண்டாம். இதையடுத்து கக்கரை சுகுமாரன் தலைமை விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.

சுவாமிமலை சுந்தர விமல் நாதன்: கும்பகோணம் அருகே சோழபுரம், மானம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதால் மழை நீர் வடிந்து செல்வதற்கு வழி இல்லாமல் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கலெக்டர்: இனிமேல் நெடுஞ்சாலைத் துறை யினர் சாலை அமைக்கும்போது வாய்க்கால்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நீர் வளத்துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.

ராய முண்டான்பட்டி ஜீவாகுமார்: சித்திரக்குடி பூதரயநல்லூர் விண்ணமங்கலம் கொளத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து இன்னும் கணக்கெடுப்பு செய்ய அலுவலர்கள் வரவில்லை. அம்மையகரம் ரவிச்சந்தர் கணக்கெடுப்பு பணி இன்னும் எங்குமே தொடங்கவில்லை இப்பணி விரைவாக தொடங்க வேண்டும். திருவோணம் சின்னத்துரை மாவட்டத்தில் எவ்வளவு ஏக்கரில் பயிர்கள் மூழ்கியுள்ளன? எவ்வளவு ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன? விரைவாக நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாண் இணை இயக்குனர் வித்யா: மாவட்டத்தில் 13,000 ஏக்கரில் பயிர்கள் மூழ்கியுள்ளன. தண்ணீர் வடிந்த பிறகு 33 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்பு ஏற்பட்ட வயல் களில் களப்பணியாளர்கள் கணக்கெடுப்பு செய்து நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.

விளம்பரம்

You Might Also Like

திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
மேகதாது பகுதியை முற்றுகையிட தஞ்சாவூரில் இருந்து விவசாயிகள் பயணம்
திமுக கூட்டணியில் விரிசல்: தவெகவுக்கு ஜாக்பாட்: தேர்தல் நிலவரத்தை விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனருமான முத்துக்குமார்
கோவை வடக்கு மாவட்ட தி.மு.க மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி உழவர் சந்தையில் புதிய கடைகள் கட்ட பூமி பூஜை

September 6, 2025
64 Views
ஏமாற்றி மீனவர் வாக்குகளை அறுவடை.
சுமார் ஒரு கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு
முள்ளம் பன்றி வனத்துறையிடம் ஒப்படைப்பு
அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் கடத்தல் முயற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account