By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேகதாது பகுதியை முற்றுகையிட தஞ்சாவூரில் இருந்து விவசாயிகள் பயணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மேகதாது பகுதியை முற்றுகையிட தஞ்சாவூரில் இருந்து விவசாயிகள் பயணம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

மேகதாது பகுதியை முற்றுகையிட தஞ்சாவூரில் இருந்து விவசாயிகள் பயணம்

Last updated: June 1, 2026 6:11 pm
June 1, 2026
22 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 1 –

மேகதாது பகுதியில் அணைக் கட்டும் முயற்சியை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தஞ்சாவூரில் இருந்து 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணைக்கட்டி அங்கு உள்ள நீரை தங்களது மாநில பாசன தேவைகளுக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு வரவேண்டிய காவிரி நீர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் மேகதாது பகுதியில் அணைக்கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மாதாந்திர நீர் பங்கீடு கர்நாடக அரசு முறையாக வழங்க வேண்டும், மேலும் இரு மாநில விவசாயிகளின் நலன் கருதி கருத்தில் கொண்டு ராசி மணல் பகுதியில் அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேகதாது பகுதியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தமிழக காவிரி விவசாய சங்கங்கள் முடிவு செய்தது.

அதன்படி தமிழக விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தஞ்சாவூர் பெரிய கோவில் முன்பு அமைந்துள்ள மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து வாகன பேரணி தொடங்கியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில் தலைவர் திருப்பதி, துணைத்தலைவர் கிருஷ்ண மணி, துணை செயலாளர் சுவாமிநாதன் மற்றும் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் என மொத்தம் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். திருச்சி நாமக்கல் சேலம் தர்மபுரி வழியாக ஓசூர் சென்று அங்கிருந்து மேகதாது பதவிக்கு முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர்.

முன்னதாக பேரணியை தொடங்கும் போது பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் கீழ் பாசன விவசாயிகளை பாதிக்கும் வகையில், கர்நாடக அரசு புதிய அணைகளை கட்டக்கூடாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இந்த சூழலில் மேகதாது அணை திட்டத்திற்கான பணிகளை விரைவுபடுத்தி பூமி பூஜை நடத்த உள்ளதாக கர்நாடக துணை முதல் மந்திரி சிவக்குமார் அறிவித்திருப்பது சட்டவிரோதமானது. இது நீதிமன்ற அவமதிப்புக்கு உரிய செயலாகும்.

எனவே தமிழக அரசு இது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும். அதே நேரத்தில் ராசி மணல் பகுதியில் தமிழக அணைக்கட்ட அனுமதி வழங்க வேண்டும். அங்கு அணை கட்டப்பட்டால் இரு மாநில விவசாயிகளுக்கும் பயன் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான ஒப்பந்த பணியாளர்கள் திட்டத்தை ஒழிப்போம் – ஓ.பி.சி மக்கள் கட்சி தலைவர் இரத்தினசபாபதி
தருமபுரி அருகே கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: ஜமாபந்தியில் கோரிக்கை மனு
குமரி அம்மன் கோயில்களில் ஆடி முதல் செவ்வாயில் பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபாடு
மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி மர்ம சாவு: போலீஸ் விசாரணை
நாகர்கோவில் மாநகராட்சியில் தெரு நாய் பிரச்சனை மற்றும் குடிநீர் பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்: மாமன்ற கூட்டத்தில் (பொ) மேயர் மேரி பிரின்ஸி லதா உறுதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

வாடிப்பட்டி அரசு பள்ளிகளில் தமிழில்அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

June 28, 2025
58 Views
13 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா
வீட்டுமனைப்பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு; பொதுமக்கள் மனு
கிருஷ்ணகிரியில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா: மாவட்ட செயலாளர் தே.மதியழகன் துவக்கி வைத்தார்
வேகப்பந்து வீச்சுகளில் அதிக ரன் விட்டுகொடுப்பது வருத்தமே!இலங்கை கிரிக்கெட் வீரர் ஆதங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account