சுசீந்திரம், பிப். 24 –
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் வருடம் தோறும் சுவாமிக்கும் அறம்வளர்த்தநயகி அம்மனுக்கும் திருக்கல்யாண விழா தொடர்ந்து ஒன்பது நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல திருக்கல்யாண திருவிழா நிகழ்ச்சி துவங்கியது. அதனை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனை அலங்காரமண்டபத்தில் எழுந்தருளச் செய்து சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனையும் காலை மற்றும் மாலை வேளையில் சிங்க வாகனம், அன்ன வாகனம், பல்லக்கு வாகனம், கமல வாகனம் ஆகிய வாகனங்களில் அம்மன் நான்கு ரதவீதியை வலம் வரும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
வருகிற 2ஆம்தேதி காலை அறம் வளர்த்த நாயகி அம்மனை ஊர்வலமாக பறக்கை காசி விஸ்வநாதர் கோவில் கொண்டு சென்று அங்கு நீராடி அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க ஆசிரமம் விநாயகர் கோவில் கொண்டு வந்து இருப்பு வைப்பார்கள். பின்பு சுவாமியை மணப்பெண் கோலத்தில் அலங்கரித்து மேள தாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து ஊர்வலமாக தாணு மாலையசுவாமி கோவில் ரத விதியை சுற்றி கோவில் உள் உள்ள அலங்கார மண்டபத்தில் வைத்து இரவு 7.30 மணிக்கு தாணுமாலய சுவாமி கையில் உள்ள திருமாங்கல்யம் அற வளர்த்த நாயகி அம்மன் கழுத்தில் அர்ச்சதகர்கள் மந்திரம் ஓத மேளதாளங்கள் முழங்க கட்டப்பட்டு திருமங்கல வைவாகமும் நடைபெறுகிறது.
தொடர்ந்து பக்தர்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், கயிறு, மஞ்சள், சந்தனம், குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு கலந்து கொள்வார்கள். 9ம் நாளான வருகிற 3ம் தேதி அம்மன் இந்திரன் தேராகிய சப்பர தேரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று சந்திர கிரகணம் என்பதால் மதியம் முதல் இரவு வரை கோயில் நடை சாத்தப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விழா ஏற்பாடுகளை கோவில்களின் இனண ஆணையர் ஜான்சி ராணி, கண்காணிப்பாளர் ஆனந்த், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், தாணுமாலையசுவாமி கோயில் பக்தர்கள், பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.



