கோவை, அக். 5:
முன்னணி கருத்தரிப்பு சிகிச்சை மையமான ஏ4 பெர்டிலிட்டி சென்டரின் 25வது கிளை கோவை ஹோப்ஸ் பகுதியில் திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் திரைப்பட நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமார் மற்றும் பிரபல சின்னத்திரை தொகுப்பாளரும் பேச்சாளருமான கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி மையத்தை திறந்து வைத்தனர்.
புதிய கிளையில் ஒரே கூரையின் கீழ் அனைத்து வகையான கருத்தரிப்பு சிகிச்சைகளும் வழங்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. IVF, IUI, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குழந்தைப்பேறு சிகிச்சைகள், கருமுட்டை, விந்தணு மற்றும் கரு உறைவிப்பு, கருத்தரிப்புத் திறன் பாதுகாப்பு, மரபணு பரிசோதனை, லேப்ராஸ்கோப்பி, நன்கொடையாளர் மற்றும் கரு நன்கொடை திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன சிகிச்சைகள் இங்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து நிர்வாக இயக்குநர் டாக்டர் அசோக் குமார் மற்றும் குளோபல் கிளினிக் இயக்குநர் டாக்டர் அருணா அசோக் கூறுகையில், நோயாளிகளின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட சிகிச்சை திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்தனர். மேலும், அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மற்றும் மேம்பட்ட IVF தொழில்நுட்பங்களுடன் எளிதில் அணுகக்கூடிய கருத்தரிப்பு சிகிச்சையை வழங்கும் நோக்கில் கோவை கிளை செயல்படும் என்றும் கூறினர்.
மேலும், பாலிகுலர் கண்காணிப்பு, ஓவுலேஷன் இன்டக்ஷன் உள்ளிட்ட சிறப்பு சேவைகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர். கோவையை தொடர்ந்து பொள்ளாச்சி மற்றும் சேலத்திலும் புதிய கிளைகளை தொடங்க ஏ4 பெர்டிலிட்டி சென்டர் திட்டமிட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது



