By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேப்டன் விஜயகாந்த் 74-வது பிறந்தநாள்: 1,000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கேப்டன் விஜயகாந்த் 74-வது பிறந்தநாள்: 1,000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கேப்டன் விஜயகாந்த் 74-வது பிறந்தநாள்: 1,000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்

Last updated: August 27, 2026 9:48 am
August 27, 2026
9 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆக.27:

தேமுதிக நிறுவனர், புரட்சிக் கலைஞர் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழா, கட்சியினரால் வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் விஜயகாந்தின் சிலைகள் மற்றும் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், மேற்கு ஒன்றியம் பெத்ததாளபள்ளியில் தேமுதிக சார்பில் பிறந்தநாள் விழா உற்சாகமாக நடைபெற்றது. மேற்கு ஒன்றியச் செயலாளர் வஜ்ரவேல் மற்றும் ஒன்றிய அவைத் தலைவர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் கே.ஆர்.சின்னராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியையொட்டி பெத்ததாளபள்ளியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கே.ஆர்.சின்னராஜ் தொடங்கி வைத்தார். அவருக்கு மேற்கு ஒன்றியத்தின் சார்பில் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக அப்பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கேக் வெட்டி, பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வாக சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பிரியாணி உள்ளிட்ட உணவுகள் அன்னதானமாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன், மாவட்ட பொருளாளர் லட்சுமணன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் முருகேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், நிர்வாகிகள் விஜயகாந்த், பார்க் சிவா, ஒன்றிய துணைச் செயலாளர் எல்.ராமன், ஊராட்சி செயலாளர் பிரகாஷ், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் கணபதி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் வெங்கடேசன், மாயக்கண்ணன், கோவிந்தராஜ், டி.சி.சீனி, ஜி.கோவிந்தராஜ், மாவட்ட தொழிற்சங்க துணைச் செயலாளர் ராமசாமி, முருகன், அன்பு, ஊராட்சித் துணைச் செயலாளர் கோவிந்தன், சின்னத்தம்பி, மோகன், சிவா, கார்த்திக், செல்வம், ஜெயலட்சுமி, கிருஷ்ணவேணி, அரசு, வள்ளியம்மா, தமிழ்ச்செல்வி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இறுதியாக பெத்ததாளபள்ளி மேற்கு ஒன்றிய பொருளாளர் கார்த்தி, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சி அப்பகுதி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

விளம்பரம்

You Might Also Like

கனவு காணுங்கள் தனித்திறமை வளர்த்து கொள்ளுங்கள்நாசா விஞ்ஞானி அறிவுரை
இறந்த நபர் கூலிப்படை வைத்துகொலை
மும்பையில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கங்களை குவித்த தென்காசி மாணவ மாணவிகள்
கன்னியாகுமரி அருகே கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 130 நபர்களிடம் ரூ 1.50 கோடி ஏமாற்றிய நபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

உரிய இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

May 11, 2026
79 Views
ராட்டினம் அருந்து விழுந்ததில் 2 குழந்தைகள் காயம்
தடை செய்யப்பட்ட பகுதியில் கட்டாய வசூல் வேட்டை கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
பாதாள சாக்கடை திட்டம் வேண்டும் என்று சாலை மறியல் போராட்டம்!!
ரெட் கிராஸ் சொசைட்டி பொறுப்பாளர்கள் தேர்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account