களியக்காவிளை, ஜூன் 6 –
களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியை சேர்ந்தவர் பேபி குமார். இவர் தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பேபி குமாரின் மகள் கீது (27)ன் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் அருகில் உறங்கி கொண்டிருந்த 3 மாத குழந்தையின் கையில் இருந்த அரை பவுன் தங்க பிரேஸ்லெட் ஆகியவற்றை திருடிக்கொண்டு அந்த நபர் தப்பிச்சென்றுள்ளார்.
இது குறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில், மார்த்தாண்டம் உட்கோட்ட துணை சூப்பிரண்டு நல்லசிவம் மற்றும் களியக்காவிளை இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் மகேந்த் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி காமிரா காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்ததில், புலந்தேரி அய்ந்திதோட்டம், புத்தன்வீடு பகுதியை சேர்ந்த சிமி குட்டன் (40) என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து சிமி குட்டனை கைது செய்து நகைகளை மீட்டனர். திருட்டில் ஈடுபட்ட சிமி கைது செய்து, திருடப்பட்ட மீட்ட நகைகளை களியக்காவிளை போலீஸ் குழுவினரை போலீஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டினார்.



