ஸ்ரீவில்லிபுத்தூர், நவம்பர் 22 –
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை, இங்கிலாந்து, எம்ஐடி ஸ்கொயர் குரூப் ஆஃப் கம்பெனிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்த விழா ஏற்பாடு செய்தது. பல்கலைக்கழக துணைத் தலைவர் முனைவர் எஸ். சசி ஆனந்த் வாழ்த்துரை வழங்கினார்.
துணைவேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வி. வாசுதேவன் மற்றும் இங்கிலாந்து,எம்ஐடி, இணை நிறுவனர், சிஓஓ, புவனேஸ்வரி லோகநாதன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இணை நிறுவனர், சத்தியநாராயணன் கேசவராஜ்,கம்பெனி ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவோர் மாதிரிகளை எடுத்துரைத்தார். ஆர் & டி இயக்குநர் டாக்டர் எம். பள்ளிகொண்ட ராஜசேகரன் வரவேற்றார். ஜேடிபிஐ தலைவர் டெனி, புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பாடுகளை விவரித்தார்.
“சிறப்பு ஆராய்ச்சி மையம் ஆர்ஏஐஎஸ்இ” துணைவேந்தர் மற்றும் பதிவாளரால் தொடங்கப்பட்டது. இந்த மையம் இடைநிலை ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும், தொழில்நுட்ப பரிமாற்றத்தை துரிதப்படுத்தும், வணிகமயமாக்கல், தொழில்முனைவோர் வளர்ச்சியை வலுப்படுத்தும் . திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்,எம். முரளி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக டீன்கள் மற்றும் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.



