கருங்கல், அக். 2 –
கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் ராஜீவ் காந்தி திருவுருவ சிலை முன்பு மகாத்மா காந்தி 157வது பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் 50வது நினைவு தினம் நிகழ்ச்சிகள் இன்று நடந்தது. கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகாத்மா காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் குமரேசன், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில நிர்வாகிகள் டைட்டஸ், ஆஸ்கர் பிரடி, தமிழ்நாடு மாநில மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், மாவட்ட நிர்வாகிகள் கருங்கல் சுனில்குமார், செல்வ ஜிடு மகேஷ், ஜஸ்டஸ் அமிர்தயைன், அருள்தாசன், பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ், ஊராட்சி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஜெபர்சன், சுரேஷ் கியூபர்ட் ராஜ், ஜெஸ்டின், அருள்ராஜ், பிறைட், ஜெனில், ராஜகிளன், மரிய அருள் தாஸ், கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் துணை தலைவர் ராஜேஷ், கருங்கல் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன் பால்ராஜ், ஓ.பி.சி பிரிவு தலைவர் சிஜின் ஆல்பர்ட், கலை இலக்கிய பிரிவு மாவட்ட தலைவர் மரிய அருள் தாஸ், கிள்ளியூர் வட்டார மகிளா காங்கிரஸ் தலைவர் விஜயராணி, கிள்ளியூர் வட்டார ஐ.என்.டி.யூ.சி தலைவர் ஆசீர் பிறைட் சிங், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ஜோபின் சிறில், ஜெஸ்டின் வினோவின் சிங், ஜெயக்குமார், லில்லிபாய், நிர்வாகிகள் ராஜேஷ், பிரதாப் சிங், கிறிஸ்து தாஸ், மோயிசன், லதிஸ், ஜஸ்டின், கிளைமெண்ட், ஜேக்கப், ஸ்டீபன், ஆப்பிகோடு ஜோஸ், ஜெயகுமார், வின்சென்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.



