திருவள்ளூர் மாவட்டம், ஜூலை 9 –
ஊத்துக்கோட்டை, அரசு போக்குவரத்து பணிமனை அருகே கட்டப்பட்ட பிரம்மாண்ட வசந்த் அன் கோ திறப்பு விழாவில் வசந்த் அன் கோ நிர்வாக பங்குதாரர்கள் தமிழ் செல்வி வசந்தகுமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்தும், குத்துவிளக்கு ஏற்றி விற்பனையை துவக்கி வைத்தனர்.
மேலும் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களும் மற்றும் கட்டில் மெத்தை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களும் விற்பனைக்கு தொடங்கியது. மேலும் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும் என்பதால் முதல் நாளே ஊத்துக்கோட்டை, அதன் சுற்றுவட்டார பகுதியிலிருந்து பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான வாடிக்கையாளர்கள் கடையில் பொருட்களை வாங்க வருகை புரிந்தனர்.
அதனைத் தொடர்ந்து கடையின் பணியாளர்களுடன் கேக் வெட்டிக் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் கிளை மேலாளர் கிரன், கிஷோர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் விநாயகமூர்த்தி, ஊத்துக்கோட்டை காங்கிரஸ் பேரூராட்சி தலைவர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் அந்தோணி சேவியர், பொறுப்பாளர் கருணைக்கண்ணன்,
ஊத்துக்கோட்டை காங்கிரஸ் மகளிர் அணி தலைவி அம்சா, செயலாளர் பூபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



