ஈரோடு, செப். 22:
நஞ்சை ஊத்துக்குளி கருந்தேவன்பாளையத்தில் உள்ள அல்-அமீன் பொறியியல் கல்லூரி மற்றும் ஈரோடு மத்திய அரிமா சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சண்முகன் தொடங்கி வைத்தார்.
முகாமில் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் ரத்ததானம் வழங்கினர். தொடர்ந்து, ஈரோடு மத்திய அரிமா சங்கம் சார்பில் ‘சிகரம் நோக்கி’ என்ற தலைப்பில் தலைமைப் பண்பு குறித்த பயிற்சி பட்டறையும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் எ.எம்.ஜெ. முகமது ஜூபைர் ரஹ்மான், தலைவர் ஹெச்.ஏ. ஹசன் அலி, செயலர் மற்றும் தாளாளர் ஏ.கே. ஜபருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி நிர்வாகிகள், லயன்ஸ் கிளப் பிரதிநிதிகள் மற்றும் சிவில் இன்ஜினியரிங் சங்கத்தினரும் பங்கேற்றனர்.



