ஈரோடு, ஜூலை 27 –
ஈரோடு ஆர்.கே.வி. சாலையில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை சார்பில் பல்வேறு சமூக நலத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஆர்.கே.வி. சாலையை மெருகூட்டும் வகையிலும் போக்குவரத்து சீரமைப்பிற்காகவும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை எதிரே புதிய ரவுண்டானா அமைக்கப்பட்டது. திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கண்ணபிரான் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட ஈரோடு மாவட்ட காவல்துறை குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் மற்றும் ஈரோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் ரிப்பன் வெட்டி புதிய ரவுண்டானாவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முறைப்படி திறந்து வைத்தனர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த அழகிய ரவுண்டானாவால் அப்பகுதியே புதுப் பொலிவுடன் மிளிர்கிறது என்றும், போக்குவரத்து நெரிசல் குறைந்து பயனுள்ளதாக இருக்கும் என்றும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதி வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.



