சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகளை ராஜா எம்எல்ஏ வழங்கினார் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன் கோவில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால் ஏற்பாட்டில் மருத்துவமனைக்கு ஸ்டீல் பெட், இருக்கைகள் மின்விசிறிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சமுத்திரம் தலைமை வகித்தார். டாக்டர் மகாலட்சுமி, திமுக மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகரச் செயலாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர்கள் ஆனந்தராஜ் சுபாஷ் குகன் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுகாதார நிலையத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படங்கள் மாட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகளை வழங்கினார் . அதனை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஸ்டீல் பெட், இருக்கைகள் மின்விசிறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார் நிகழ்ச்சியில் திமுக பொறுப்பாளர்கள் மற்றும் செவிலியர்கள் ,மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்



