ஆம்பூர், ஜூன் 22 –
திருப்பத்தூர் மாவட்டம தமிழக வெற்றிக் கழக விவசாய அணி சார்பாக சின்னபள்ளிகுப்பம் ஊராட்சி ஈச்சம்பட்டு கிராமத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெ. பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஜி. ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் வி. நவீன்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரத்த தானம் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுமார் 27 பேர் ரத்த தானம் செய்தனர்.
சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுது பொருட்கள், இனிப்பு வழங்கப்பட்டது.
மாவட்ட இணைச் செயலாளர் சி. சரவணன், மாவட்ட துணை செயலாளர் ஆர்த்தி, ஒன்றிய இணைச் செயலாளர் சுமன் ராஜ், துணைச் செயலாளர் பிரகாஷ், செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், மேகலா, காவியா, சுமியா, நவீனராசு, ராகுல், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ராகுல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சந்தோஷ், விவசாய அணி மாவட்ட நிர்வாகிகள் குமரேசன், பார்த்திபன், காமேஷ், அசோக், வெங்கடேசன், மேல்குப்பம் கிளை செயலாளர்கள் செந்தில், ரவி, சுகுமார், செவிலியர் சுமதிரமேஷ், மகளிர் அணி நிர்வாகிகள் பிரியா, அருணா, மாவட்ட மாணவர் அணி இணை அமைப்பாளர் ராகுல், ஆம்பூர் நகர நிர்வாகிகள் சுரேந்தர், ஹேம்நாத், காங்கிரஸ் கட்சி மாதனூர் மேற்கு ஒன்றிய தலைவர் சுரேந்தர், மாவட்ட மாணவரணி நிர்வாகி ஜெகத் ஆகியோர் கலந்து கொண்டனர்.



