கிருஷ்ணகிரி ஏப் 17: கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிப்பட்டினம் ஒன்றியத்துக்குட்பட்ட பனகமுட்லு கிராமத்தில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு வருடம் தோறும் பனகமுட்லு இளைஞர் அணி சார்பில் கிரிக்கெட் திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஐந்தாம் வருடமாக மாபெரும் கிரிக்கெட் திருவிழா நடைபெற்றது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்த இளைஞர்கள் சிறப்பான தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, மத்தூர், காரிமங்கலம், வேப்பனஹள்ளி, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்து அணிகளாக பிரிக்கப்பட்டு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை காவேரிப்பட்டினம் அணியினரும், இரண்டாம் பரிசை பனகமுட்லு அணியினரும், மூன்றாம் பரிசை சொன்னம்பட்டி அணியினரும் தட்டிச் சென்றனர். இதில் இரண்டாம் பரிசான பத்தாயிரம் ரூபாயை தேமுதிக மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.சி.கனக்கன், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் சசிகுமார், ஆகியோர் பத்தாயிரம் ரூபாய் மற்றும் கோப்பையை பணகமுட்லு கிராம இளைஞர்களுக்கு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அண்ணல் அம்பேத்கர் நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை காண பல்வேறு கிராமத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் ஆரவாரத்துடன் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள்.



