வேலூர் 09
பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் தீய தொடுதல் குறித்து சொல்லி தருவதை விட உங்கள் யாரும் தொட விட கூடாது என கற்றுதாருங்கள் அனைவரும் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் அறிந்திருக்க வேண்டும் – காட்பாடி வி.ஐடியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் பேச்சு
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மகளிர் தின விழாவானது பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது இதில் பல்கலைக்கழக துணை தலைவர்கள் சங்கர் ,சேகர் மற்றும் முதன்மை இயக்குநர் சந்தியா பெண்ட்டா ரெட்டி உள்ளிட்டோரும் திரளான மாணவிகளும் மகளிர்களும் பங்கேற்றனர் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் கலந்துகொண்டு மகளிர் தின விழாவினை குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார் பின்னர் மகளிர்கள் நவீன கார்களை ஓட்டும் ரேசையும் துவங்கி மாணவிகளிடம் அதற்கான சாவியையும் அவர் வழங்கினார்
பின்னர் இவ்விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் பேசுகையில் அன்றைய காலக்கட்டங்களில் மகளிர்களுக்கு கட்டுபாடுகள் இருந்தது ஆனால் அவைகள் தற்போதில்லை ஒரு காலத்தில் பெண்கள் சைக்கிள் கூட ஓட்ட கட்டுபாடு இருந்தது பெண்கள் அனைவரும் அவர்களின் பாதுகாப்பிற்காக சட்டங்களை அறிந்திருக்க வேண்டும் போஸ்கோ சட்டம் மற்றும் உங்கள் அழகை வர்ணித்தாலும் நீங்கள் புகார் கொடுக்கவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமையும் பெண்களுக்கு உண்டு குழந்தைகள் பெற்றோர்களின் வளர்ப்பில் தான் நல்லவர்களாக மாறுகிறார்கள் சரியில்லாதவர்களா என தெரியும் ஒரு பெண் குழந்தைக்கு நீங்கள் முதலில் நல்ல தொடுதல் தீய தொடுதல் ஆகியவற்றை சொல்லி தருவதற்கு பதிலாக பெண்கள் குழந்தைகளை யாரும் தொட கூடாது என சொல்லி தாருங்கள் அதுவே அவர்களுக்கு பாதுகாப்பு காதல் காமம் என்றெல்லாம் எதுவும் கிடையாது எல்லாம் ஒரு வகையான ஈர்ப்பு மட்டும் அதில் மாணவிகள் நீங்கள் சிக்காமல் முன்னேற்றமடைய கல்வியில் ஆர்வம் காட்டவேண்டுமென பேசினார்