By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞரை பிடிக்க போலீஸ் தீவிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞரை பிடிக்க போலீஸ் தீவிரம்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞரை பிடிக்க போலீஸ் தீவிரம்

Last updated: November 14, 2025 4:40 pm
November 14, 2025
65 Views
Share
SHARE

குளச்சல், நவ. 14 –

வெள்ளிச்சந்தை அருகே முட்டம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி பிளஸ் 2 முடித்து விட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த சிறுமிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்குமுன் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சிறுமி தனது இன்ஸ்டாகிராம் காதலனை சந்திக்க சென்றுள்ளார். சிறுமியை அந்த இளைஞர் கன்னியாகுமரி அழைத்து சென்றுள்ளார். அங்கு தனியார் விடுதியில் அறை எடுத்து 2 பேரும் தங்கியுள்ளனர். அங்கு வைத்து திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், சிறுமியை மறுநாள் அவரது ஊருக்கு செல்லும் பஸ்சில் ஏற்றிவிட்டு இளைஞர் தப்பியோடிவிட்டார்.

மறுநாள் மாலை சிறுமி வீட்டிற்கு சோர்வடைந்த நிலையில் வந்தார். அவரிடம் சிறுமியின் தாயார் விசாரித்துள்ளார். அப்போது, தனக்கு நடந்த கொடூரம் குறித்து சிறுமி தனது தாயிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் குளச்சல் மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கு இடையில் போலீசின் முதற்கட்ட விசாரணையில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி அதன் மூலம் சிறுமியை வலையில் விழ வைத்துள்ளது தெரிய வந்தது. இதை எடுத்து குளச்சல் மகளிர் போலீசார் சைபர் கிரைம் போலீசாரின் உதவியை நாடினர். சைபர் கிரைம் போலீசார் வாலிபர் குறித்து துப்பு துலக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதற்கிடையில் அந்த சிறுமியை வாலிபர் அழைத்து சென்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆராய்ந்து இந்த வாலிபரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் அருகே பல்லடத்தில் பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!
என்.டி.ஏ., கூட்டணி ஆட்சி அமைக்கும்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் தேர்வுக் குழு கூட்டம் : விஜய் வசந்த் எம் பி பங்கேற்பு
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் சுத்திகரிப்பு 50 சதவீதம் பாதிப்பு: தருமபுரி மாவட்ட மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஆட்சியர் அறிவுறுத்தல்
45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை அருகே மரத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

December 27, 2025
56 Views
மார்த்தாண்டம் பள்ளிவாசலில் மோதல்
மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி ஆய்வினை மேற்கொண்டார்
கடலூரில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேமுதிக 2.0 மாநாட்டில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!!
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account