நாகர்கோவில், செப். 17 –
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தியப் பல் மருத்துவச் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணி இணைந்து நடத்திய மாபெரும் இலவச பல் மருத்துவம் மற்றும் சிகிச்சை முகாம் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இந்த முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மருத்துவ உதவி தேவை பெற்றவர்களுக்கு இந்தியப் பல் மருத்துவச் சங்கத்தின் நடமாடும் பல் மருத்துவ வாகனத்தில் தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.
பல் மருத்துவச் சங்கத் தலைவர் மருத்துவர் ஜேசன் ராய், செயலாளர் மருத்துவர் பி.எல். பெரில், பொருளாளர் மருத்துவர் பெசன் ஜாஸ் மற்றும் மருத்துவர்கள் ஜெயலலிதா, அல்டா ஷாம்லின், அஷ்வினி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமினை கணிதவியல் துறைத்தலைவர் வீரபத்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் த. அஜி ஏற்பாடு செய்திருந்தார்.



