மாநில அளவிலான சதுரங்க போட்டி திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம், திண்டுக்கல் லக்சர் வேர்ல்டு பள்ளி, ஆனந்த் செஸ் அகாடமி ஆகியவை இணைந்து திண்டுக்கல் லக்சர் வேர்ல்டு பள்ளியின் உள் வளாகத்தில் நடைபெற்றது.மாநில அளவிலான சதுரங்க போட்டியில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 280 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியின் முடிவில் 8 வயதிற்குட்பட்டோர் பிரிவில் திருச்சியை சேர்ந்த சிவின், 11 வயதிற்குட்பட்ட பிரிவில் விருதுநகரைச் சேர்ந்த அக்சய விக்னேஷ், 15வயதிற்குப்பட்ட பிரிவில் மதுரையைச் சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் முதலிடம் பிடித்து மிதிவண்டிகள் பரிசாக பெற்றனர். மொத்தம் 150 மாணவ, மாணவியருக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக
பரிசளிப்பு விழாவிற்கு லக்சர் வேர்ல்டு பள்ளியின் தாளாளர் Rtn.G.சுவாமிநாதன் பரிசு பொருட்களை ரூபாய் 30,000 மதிப்பில் வழங்கினார்.ஆனந்த் செஸ் அகாடமி சார்பாக ரூபாய் 70,000 வழங்கினார்கள்.இதன் மொத்த மதிப்பு ரூபாய் 1 இலட்சம் ஆகும்.
சிறப்பு விருந்தினர்களாக நாட்டாண்மை
PMJF.Ln.Dr.N.M.B. காஜாமைதீன்,
Rtn. R.ரமேஷ்பட்டேல், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர்
Rtn. H.புருசோத்தமன், செயலாளர் Rtn.
P.சந்திரசேகரன் ஆனந்த் செஸ் அகாடமி செயலாளர் N.ரமேஷ்குமார், Rtn.மதன் முனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பதக்கம், சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்கள்.