நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றி தருமா இந்த விடியல் அரசு ?
அருந்ததியர் சமுதாய மயான ஆக்கிரமிப்பை அகற்றி சுற்றுச்சுவர் கட்டி தர கோரி கலெக்டரிடம் மனு சம்பந்தமாக ஆய்வு.
கம்பம்.
தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகில் அருந்ததியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மயானம் உள்ளது.இந்த மயான ஆக்கிரமிப்பு அகற்றி சுற்றுச்சுவர் கட்டி தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனு சம்பந்தமாக துறை சார்ந்த அதிகாரிகள் கள ஆய்வு சாத்தியப்படுமா அல்லது கண்துடைப்பா?
மயானத்தை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து தன்வசம் கையகப்படுத்தி வைத்துக்கொண்டு ஆகிரமிப்பு செய்து வருவதாக பலமுறை அருந்ததிய சமுதாய மக்கள் போராட்டம்,கலெக்டர் இடம் மனு கொடுத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் துறை சார்ந்த அலுவலர்களும் காக்கி சட்டை அதிகாரிகளும் பேச்சு வார்த்தையிலே அருந்ததிய சமுதாய மக்களை வாய் அடைத்து வந்துள்ளனர். அதன்படி மயான பகுதிகள் சுற்றிலும் செடி கொடிகள் வளர்ந்து முற் புதர்களாக காட்சியளித்து வருகிறது. மேலும் சடலங்களை அடக்கம் செய்யும் பொழுது பூச்சி பட்டைகள் கடித்து உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளதால் தேனி மாவட்ட ஆட்சியர் அவர்கள் துரித நடவடிக்கை எடுத்து ஆகிரமிப்பை அகற்றி சுற்றுச் சுவர் கட்டித் தர வழிவகை செய்ய வேண்டும் என அருந்ததிய சமுதாய பொதுமக்களும் நிர்வாகிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் மயான பகுதிகளில் மது அருந்துவதும் வெளியூரிலிருந்து வரும் நபர்களை மர்ம நபர்கள் அடித்து பணம் மற்றும் செல்போன்களை பறித்து போகும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அருந்ததிய சமுதாய மக்களின் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்குமா இந்த அரசு என கேள்வி எழுந்துள்ளது. அதன்படி இன்று துறை சார்ந்த அதிகாரிகள் கம்பம் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அருந்ததியர் சமுதாய மயானத்தில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். உடல் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் அதியர் மணி, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் கோட்டை குரு முருகன்,நாட்டாமை சுருளி ஆண்டவர், வடக்கு தெரு நாட்டாமை முருகன்,ஒன்றிய செயலாளர் முருகன்,நகரத் தலைவர் ராஜேந்திரன், நகரச் செயலாளர் கண்ணன், சபரி,மணிமாறன், மணியரசு, பெரிய பிச்சை,அண்ணாவி, உள்ளிட்ட ஏராளமான ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் கள ஆய்வில் உடன் இருந்தனர்.