திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 94 பயனாளிகளுக்கு ரூ.79 லட்சத்து 16 ஆயிரத்து 714 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன். ஆகியோர் வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில் தமிழக அரசானது மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இன்றைய தினம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அவர்களுடைய தனித்திறமைகளான ஓவியம் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் தையல் கலை உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வெளிகொணர்ந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரிடமும் ஒரு வகையான தனித்திறமைகள் உள்ளது. மாற்றுத்திறனாளி நபர்கள் அனைவரும் தங்களது திறமைகளை முறையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்
மக்களுடன் முதல்வர் முகாமில் 515 மாற்றுத்திறனாளி நபர்கள் மனு அளித்திருந்தனர். அம்மனுக்கள் முறையாக பரிசீலினை செய்யப்பட்டு 413 மனுக்கள் ஏற்கப்பட்டு அம்மனுக்களின் கோரிக்கை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய தினம் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 36 நபர்களுக்கு ரூ.36 லட்சத்து 64 ஆயிரத்து 800 மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டரும் 8 நபர்களுக்கு ரூ.91 ஆயிரத்து 560 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளும் ரூ.34 லட்சத்து 23 ஆயிரத்து 200 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி 3 நபர்களுக்கும், 1 நபருக்கு ரூ.6 ஆயிரத்து 800 மதிப்பிலான சக்கர நாற்காலியும் 2 நபர்களுக்கு ரூ.17 ஆயிரத்து 800 மதிப்பிலான மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலியும் 17 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 250 மதிப்பிலான மோட்டர் பொருத்திய தையல் இயந்திரமும் 3 நபர்களுக்கு ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்து 300 மதிப்பிலான செயற்கை கால்களும் 4 நபர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 24 மதிப்பிலான பார்வையற்றோருக்கான. கைக்கடிகாரமும் 20 நபர்களுக்கு ரூ.3 லட்சத்து 23 ஆயிரத்து 980 மதிப்பிலான ஸ்மார்ட் போன்களும்
என 94 பயனாளிகளுக்கு ரூ.79 லட்சத்து 16 ஆயிரத்து 714 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, திருவாரூர் நகர்மன்றத்
தலைவர். புவனப்பிரியா.செந்தில், ஒன்றிய பெருந்தலைவர் தேவா, நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் சோம.செந்தமிழ்செல்வன், பணிநியமன குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.