திருப்பத்தூர்:ஆக:22, திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மழுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருச்சி பெறாத புகார் தாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.
புதிதாக 31 புகார் மனுக்களை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் நேரடியாக பெற்றுக்கொண்டார் அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
மேலும் வாரந்தோறும் புதன்கிழமைகளில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக மக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் இக்கோட்டத்தில் மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் அனுகி தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.