கன்னியாகுமரி ஏப்7
குமரி மாவட்டம்
இடையன்விளை,நாடான் குளத்தில் தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த தண்ணீர் பந்தலை
மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.மாதவன் திறந்து வைத்தார்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆணைப்படி ,மாநில பொது செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தவெக சார்பில் இடையன்விளை,நாடான்குளம் பகுதியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பேரூர் நிர்வாகி விக்னேஷ் தலைமை வகித்தார்.ஒன்றிய நிர்வாகி எட்வின் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் பிரேம்குமார் உட்பட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்



