நீலகிரி. ஏப்ரல்.15.
கோத்தகிரி நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள நேரு பூங்கா கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமான ஒன்றாகும். பூங்காவில் அழகிய மலர் செடிகள், புல் தரைகள், சிறுவர் விளையாட்டு பூங்கா, கோத்தர் பழங்குடி இனத்தவர்களின் குலதெய்வமான அயனோர் அம்னோர் கோவில் , வண்ண விளக்குகளுடன் கூடிய செயற்கை நீரூற்று காட்சி ஆகியன அமைந்துள்ளது. வருடந்தோரும் நடக்கும் காய்கறி கண்காட்சி நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் கோடை விழாவில் முதல் நிகழ்ச்சியாக மே மாதத்தில் 3, 4 ஆம் தேதிகளில் தோட்டக்கலை துறை சார்பில் இரண்டு நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது இந்த காய்கறி கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்களில் இருந்து இந்த பூங்காவிற்கு வருவது வழக்கம். சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்கள் மற்றும் குழந்தைகளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக விளங்கி வருகிறது கோடை விழாவையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் பூங்காவில் 30 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன மேலும் புல் தரைகளில் அதிகப்படியாக வளர்ந்துள்ள களைசெடிகளை வெட்டி சமன்படுத்தும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் தயார் செய்யப்பட்ட இயற்கை உரத்தை பயன்படுத்தி மலர் செடிகளுக்கு உரமிடும் பணிகளும் பூங்கா ஊழியர்களால் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன தற்போது பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள நாற்றுகளில் மலர்கள் பூக்க தொடங்கியுள்ளதால் இங்குள்ள செயற்கை நீரூற்றை பராமரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மலர் செடிகள் வாடாமல் இருக்க தண்ணீர் பாய்ச்சும் பணியும் மலர் நாற்றுகளுக்கு இடையே வளர்ந்துள்ள களைச்செடிகளை அகற்றும் பணியும், புல் தரைகளில் அதிகமாக வளர்ந்துள்ள புற.களை நவீன இயந்திரங்கள் கொண்டு வெட்டி சமன்படுத்தும் பணியும் நடைபெற்று வருகின்றன. காய்கறி கண்காட்சிக்காக கோத்தகிரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நேரு பூங்காவில் முன்னேற்பாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.



