சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தா. கிறிஸ்துராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து 106 பயனாளிகளுக்கு ரூ.1.68 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
திருப்பூர்ஜன:28 சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் குடியரசு தினவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏற்றுக்கொண்டார்கள். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களையும், பலூன்களையும் பறக்கவிட்டார்கள்.
பின்னர், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசு தாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள். சிறப்பாக பணிபுரிந்த 115 அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் சார்பில் 23 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களும், 23 காவலர்களுக்கு நற்சான்றிதழ்களுகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலம் சார்பில் 35 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களும், 14 காவலர்களுக்கு நற்சான்றிதழ்களும் என மொத்தம் 210 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் வழங்கினார்கள்.
விழாவில், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.2,06,800/- மதிப்பீட்டில் பேட்டரி வீல் சேர் மற்றும் பெட்ரோல் ஸ்கூட்டரையும், மாவட்ட தொழல் மையம் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.97.70 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கடனுதவியையும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் 06 பயனாளிகளுக்கு ரூ.44,92,913/- மதிப்பீட்டில் சுற்றுலா வாகனம், சரக்கு வாகனம், கார்மெண்ட்ஸ் கடனுதவிகளையும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் 35 பயனாளிகளுக்கு ரூ.7,54,800/- மதிப்பீட்டில் கல்வி, திருமணம், இயற்கை மரணம் மற்றும் ஓய்வூதிய உதவித்தொகையினையும், பால்வளத்துறையின் சார்பில் 09 நபர்களுக்கு ரூ.6,48,000/- மதிப்பீட்டில் கறவை மாடு பராமரிப்பு கடனுதவிகளையும், 03 சிறந்த பால் உற்பத்தியாளர்களை கௌரவித்தல் பரிசுகளையும், வழங்கினார்கள்.