By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்
அரியலூர்மாவட்டம்

கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்

Last updated: November 25, 2024 10:00 am
November 25, 2024
43 Views
Share
SHARE

அரியலூர், நவ;24

 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், குருவாலப்பர்கோவில் ஊராட்சியில் நவம்பர்-1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேற்று கலந்துகொண்டார்.

 

கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

 

அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் ஜெயங்கொண்டம்  ஊராட்சி ஒன்றியம், குருவாலப்பர்கோவில் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, கூட்டாண்மை வாழ்வாதாரம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம் -2024-25, கிராம வளர்ச்சித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

 

கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது தேவைகளை தீர்மானமாக நிறைவேற்றி அதனை செயல்படுத்தி கொள்ளும் வாய்ப்பினை வழங்குவது உள்ளாட்சி அமைப்புகளாகும். அதனை நினைவு கூறும் வகையில் உள்ளாட்சி தினத்தினை சிறப்பாக கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவிடப்பட்டதன் அடிப்படையில் நேற்றையதினம் ஜெயங்கொண்டம் ஒன்றியம், குருவாலப்பர்கோவில் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தினை சிறப்பிக்கும் வகையில் கிராம சபைக் கூட்டமானது நடத்தப்பட்டுள்ளது.  

 

பொதுமக்கள் கிராம சபை கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், அதற்கான நிதி ஒதுக்கீடு, வரவு செலவுத் திட்டங்கள் போன்றவற்றை கிராம சபைக் கூட்டங்களின் வாயிலாக தெரிந்துகொள்ளும் வகையில் இக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அனைவருக்கும் கழிவறை வசதி திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் சுகாதார நலனை கருத்திற்கொண்டு திறந்தவெளியில் மலம் கழித்தலை தவிர்க்க வேண்டும். இதன் காரணமாக தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க இயலும். அதேபோன்று குடிநீர் வசதிகள் முறையாக பொதுமக்களுக்கு தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்திடவேண்டும். மேலும் குடிநீரில் உள்ள குளோரின் அளவு, குடிநீரின் தரம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். அரசின் திட்டங்கள், திட்ட செயலாக்கங்களில் பொதுமக்களும் பங்கேற்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இக்கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொண்டு தங்கள் கிராமத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

 

பின்னர், சிறப்பாக பணியாற்றிய கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கும், சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னாடை போற்றி வாழ்த்துத் தெரிவித்தார்.

 

அதனைத் தொடர்ந்து குருவாலப்பர்கோவில் வடக்கு கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் குழந்தைகள் மையத்தினை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆய்வு மேற்கொண்டார்.

 

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கவிதா, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பரசி, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத்குமார், ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், குருவாலப்பர்கோவில் ஊராட்சி மன்றத்தலைவர் முல்லைநாதன் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

பாஜக கட்சியின் மாவட்ட தலைவர் வாசுதேவன் திருப்பத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி.
மாணவி அனன்யா செய்து நோவா உலகசாதனை
குறைதீர்க்கும்கூட்டம் ஆட்சியர் சதிஷ் தலைமையில்
சென்னை, பூந்தமல்லி, ரோட்டில்எம்.எம்.தங்க மாளிகை கோலாகல திறப்பு விழா.
காரில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

இயற்கை தேமோர் கரைசல் விளக்கமளித்த மாணவிகள்

March 30, 2025
28 Views
காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா
நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் வெற்றி
மதுபூரின் TSC Baid அகாடமி
கிள்ளியூர் வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account