சுசீந்திரம்.மே.11
நாகர்கோவில் அருகே உள்ள குஞ்சன்விளையை சேர்ந்தவர் ஸ்ரீராமசந்திரன் வயது 27, இவர் அந்தப் பகுதியில் உள்ள சவுண்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் தனியார் நிறுவனத்தில்ரூ.1. 50 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.
அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்ட ஸ்ரீராமசந்திரன் சம்பவத்தன்று (7-5-2025) வீட்டிற்கு விஷம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக ஸ்ரீராமசந்திரன் இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மனைவி தஜின்ரிப்சன் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


