தேனி மாவட்டம், அக் – 3
தேனி மாவட்டம், சின்னமனூர் மகாத்மா காந்திஜியின் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு சின்னமனூரில் உள்ள தேசப்பிதாவின் திருவுருவச் சிலைக்கு ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி மற்றும் சிவகாமி நாதன் பழனிவேல் சங்கரநாராயணன் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்பு இனிப்புகள் வழங்கியும் காந்தி ஜெயந்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள் வெள்ளையர்களின் பல இன்னல்களுக்கிடையில் அகிம்சை என்ற அறவழியில் சத்தியாகிரகம் என்ற நெறிமுறையில் போராடி அடிமைத்தனத்திலிருந்து இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் விடுதலை பெற்றுத்தந்த வரலாற்றை சிவாஜி விளக்கினார் பின்னர் இரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்போம்! வந்தே மாதரம்! ஜெய் ஹிந்த்! என்று அனைவரும் முழக்கமிட்டனர்



