மேல்புறம் அக் 13
தமிழ்நாடு
அறிவியல இயக்கம் குழந்தைகளிடம் அறிவியல் மனப்பான்மையை உருவாக்கி ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளை ஏற்படுத்தி..
அவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்கும் முயற்சியில் மாநிலம் முழுவதும் துளிர் இல்லங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான துளிர் இல்லங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் துளிர் இல்லங்களை வழிநடத்தும் ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒவ்வொரு ஒன்றியங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
. மேல்புறம் ஒன்றியத்தில் செயல்படும் துளிர் இல்லத் தன்னார்வலர்களுக்கான பயிற்சிக்கு ஒன்றிய தலைவர் வினோத் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர் பிறீதி அனைவரையும் வரவேற்றார்.
மாவட்டச் செயலாளர் சிவஸ்ரீ ரமேஷ்
துளிர் இல்லங்களில் அவசியம் குறித்து தொடக்க உரையாற்றினார்.
மாநிலத் துணைத் தலைவர் சசிகுமார் அறிவியல் மனப்பான்மையை குழந்தைகளிடம் ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
துளிர் திறனறிதல் தேர்வு மற்றும் குழந்தைகள் அறிவியல் மாநாடு இவற்றில் துளிர் இல்லக் குழந்தைகளை பங்கேற்கச் செய்வது,
அறிவியல் அறிஞர்களின் பிறந்தநாள் அறிவியல் தினங்களை கொண்டாடுவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.