மதுரை, செப். 23 –
மதுரை பாரதிய ஜனதா கட்சி மேற்கு மாவட்டம் பட்டியல் அணி சார்பாக பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா திருப்பரங்குன்றம் தெற்கு மண்டல் பெருங்குடி ஊராட்சி எஸ்டிகே நகரில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு 75 மரக்கன்றுகள் நடும் விழா தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் பட்டியல் அணி மேற்கு மாவட்ட தலைவர் முத்துமாரி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சோலை மணிகண்டன், நகர் மாவட்டச் செயலாளர் சகாதேவன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் எஸ். மலைச்சாமி, எஸ். பழனிகுமார், திருப்பரங்குன்றம் தெற்கு மண்டல தலைவர் முத்துச்சோனை, திருப்பரங்குன்றம் நகர் மண்டல தலைவர் கே.பி. வேல்முருகன் மற்றும் பொதுமக்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



