ஆம்பூர்:நவ:12, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் விஜய பாரத மக்கள் கட்சியினர் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
விஜய பாரத மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் K. சசிகுமார் தலைமையில் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது திருப்பத்தூர் மாவட்டத்தினை உள்ளடக்கிய வாணியம்பாடி ஆம்பூர் மாதனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்திலும் நகரத்திலும் சுமார் 5 லட்சத்துக்கும் மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர் அதில் சுமார் 40,000 தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். இளைஞர்கள் பெண்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். வேலையில்லாத திண்டாட்டத்தால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குழந்தைகளை படிக்க வைக்க வழியின்றி கடன் வாங்கி படிக்க வைக்கும் சூழல் உள்ளது. ஏற்கனவே வேலை கொடுத்து வந்த தனியார் கம்பெனிகள் TAW,MOHIB,UNISCO, FAIZAN என மேலும் சில தனியார் கம்பெனிகள் முன் அறிவிப்பு இன்றி மூடப்பட்டதால் வேலைவாய்ப்பு இன்றி இளைஞர்களும் பொதுமக்களும் தவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு இதுவரை எந்த ஒரு செட்டில்மெண்ட் பணமும் நிவாரண உதவியும் வழங்கப்படவில்லை. சில நிறுவனங்கள் போலியாக காசோலைகளை வழங்கி ஏமாற்றுகிறார்கள். குறிப்பாக TAW கம்பெனியின் மூலம் வழங்கப்பட்ட காசோலை இதுவரை பணமாக்கப்படவில்லை. பணியாளர்களை திட்டமிட்டு ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இளைஞர்களின் வாழ்வாதாரம் இது வரும் காலங்களில் பாதிக்கும் என்பதால் மாதனூர் ஒன்றியம் மின்னூரில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு தொழிற்பேட்டையை விரிவாக்கம் செய்து பலவிதமான தொழிற்சாலைகளை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுமாறும் ஏற்கனவே தனியார் கம்பெனிகளில் நிலுவையில் உள்ள காசோலை PF, பென்ஷன் போன்றவை தொழிலாளர்களுக்கு கிடைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் மனுவை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய விசாரணை மூலம் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார். மனு வழங்கும்போது மாநில துணை தலைவர் சக்தி மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட விஜய பாரத மக்கள் கட்சியினர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.