விளாத்திகுளம், அக்டோபர் 25.
தூத்துக்குடியில் இருந்து தேங்காய் நார் ஏற்றுவதற்காக கண்டெய்னர் லாரி ஒன்று விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றிக்கு சென்றுள்ளது. லாரியை திருச்செந்தூரை சேர்ந்த ஆனந்த ராஜ் (30) ஓட்டிச் சென்றுள்ளார். கண்டெய்னர் லாரி சிந்தலக்கரை அருகே மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது இயற்கை உபாதை கழிப்பதற்காக டிரைவர் வண்டி ஓரமாக நிறுத்திய போது திடீரென சாலையின் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் ஆனந்த ராஜ்க்கு லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் எட்டையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த டிரைவர் ஆனந்தராஜை மீட்டு சிகிச்சைக்காக எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை ஓரத்தில் லாரி நிறுத்திய போது மண் சரிந்து கண்டெய்னர் லாரி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.



